கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி மாணவிகளிடம் தாளார் பொறுப்பில் உள்ள பாதிரியார் தவறாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே அறந்தாங்கி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பாதிரியார் மரிய பிரிட்டோ தாளாளர் பொறுப்பில் உள்ளார். இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களே தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் ஆசிரியர்களிடமும்,சம்மந்தப்பட்ட மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு யார்மீது இருந்தாலும் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post