அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜூன் 3ம் தேதி அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி திறப்பதற்கு முன்பே ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பள்ளியின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளியில் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
பாட புத்தகம், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவைகளை பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், திறந்த வெளிக் கிணறு, பழுதடைந்த கட்டடங்கள் போன்றவை பள்ளி வளாகத்தில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Discussion about this post