சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் இரண்டு நாட்கள் முன்பிலிருந்து தற்போது வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அவர்கள் போராடுவதற்கான நோக்கம் என்பது, அதிக ஆண்டுகளாக தாங்கள் குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருவதாக இருப்பதால் சம்பளத்தை அதிகரிக்கும் விதமாகவும், தாங்கள் தற்காலிகமாக பணியில் இருந்து வருவதால் அப்பணியினை நிரந்தரப் பணியாக அறிவிக்கும்படியும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடியாத திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையானது மிகவும் மோசம் அடைந்துள்ள நிலையில் இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மிகப் பெரிய அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினைச் சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் எந்தவித மேற்பார்வையும் நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காத்துவருவது ஆசிரியர்களிடையே வருத்தத்தினையும் மன உளைச்சலையும் தந்திருக்கிறது. இதனை அடுத்து நேற்று இரவு முழுவதும் ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்கொண்டு நிருபர்களிடம் பதிலளித்த ஆசிரியர்கள் இந்த அரசு எங்களைக் கண்டுகொள்ளவில்லை என்றால் நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.