பள்ளிக்கல்வித்துறை சார்பா தற்காலிக ஆசிரியர்கள நியமிக்கிறதுல தில்லுமுல்லு நடக்கிறதா பரவலான குற்றச்சாட்டு கூறப்படுது. இந்த விடியா அரசு நாங்க ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள நிரப்புறதா சொல்லுச்சு. அத நம்பி அரசு ஆசிரியர் கனவோடு பலரும் காத்திருக்க, அந்த கனவுல மண்ண போட்டு, குறைச்சலான சம்பளத்துல தற்காலிக ஆசிரியர்கள நியமிச்சிட்டு வாராங்க. அதுவும், தலைமை ஆசிரியர் மேற்பார்வையிலயும், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாகவும் தற்காலிக ஆசிரியர்கள நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்துனதா சொல்லப்படுற நிலையில, தனியார் தன்னார்வ நிறுவனங்கள் மூலமா இந்த தற்காலிக ஆசிரியர் நியமனம் நடக்குதாம். இதுல அந்த தனியார் நிறுவனங்கள் பல லட்சம் ரூபாயை கமிஷனா வாங்கிட்டு வேலை போட்டு கொடுத்ததா குற்றச்சாட்டு கூறப்படுற நிலையில, அப்படி வேலைக்கு வந்தவங்களுக்கு கடந்த 4 மாசமா சம்பளம் வரலன்னும் குற்றம்சாட்டியிருக்காங்க…
பள்ளிக்கல்வித்துறையில நடக்குற இந்த கமிஷன் விஷயங்கள் எல்லாம் துறை அமைச்சரோட கவனத்துக்கு தெரியலையா? இல்ல, வாங்குறத வாங்கிக்கிட்டு கண்டுக்கிடமா இருக்காரான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.