ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீது வரி குறைப்பு

டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், 33 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஏ.சி., சிமெண்ட், டயர் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், கூட்டத்திற்குப் பின், 33 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 7 பொருட்கள் மீதான வரி, 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 26 பொருட்களின் வரி, 12 மற்றும் 5 சதவீதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version