வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தனது கையில் இல்லை: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தம், ஆட்டோ மொபைல் துறையில் வளர்ச்சியை கொண்டு வரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களில் ஈடுபடுவோர் எளிமையாக வரி செலுத்துவது குறித்த ஆலோசானை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து விளக்கம் அளித்தார். வரி செலுத்துவதை எளிமைபடுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தனது கையில் இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Exit mobile version