செ.பாலாஜி இல்லாமலும் இயங்கும் “கரூர் கேங்”.. டாஸ்மாக்கில் தொடரும் 10 ரூபாய் வசூல்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழல் என்பது வாடிக்கையான ஒன்றுதான். அதிலும் திமுக டாஸ்மாக் துறையின் பொறுப்பை செந்தில்பாலாஜியிடம் தந்ததிலிருந்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டப்பட்டது. அதுவும் நேர்வழியில் இல்லை. மறைமுக வழியில் தான். அதற்கு கரூர் கேங் என்ற கும்பல் இராப்பகலாக வேலைப் பார்த்து மறைமுக பணத்தை திமுக குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு செந்தில்பாலாஜி கொடுத்த அசைண்மெண்ட்.

“செ.பா இல்லாமலும் இயங்கும் கரூர் கேங்”

அதிலும் குறிப்பாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் விற்கக்கூடிய மதுபானத்திற்கு கூடுதல் தொகையாக பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அதற்கு டாஸ்மாக் ஊழியர்களும் ஒருவகை காரணம். இன்றைக்கு இவ்வளவுத் தொகை என்று நிர்ணயிக்கப்பட்டு வசூல் வேட்டையில் கரூர் கம்பெனி இறங்கிவிடுகிறது. அமைச்சரின் ஆட்கள் என்று பயந்து இதற்கு டாஸ்மாக் ஊழியர்களும் பயப்பட வேண்டியுள்ளது. இப்படி ஒரு புறம் நடந்தேற தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஈடுபடும் பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால் இன்றைக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த அவல நிலையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுப்பிரியர்கள் இன்னும் குற்றம்சாட்டியே வருகின்றனர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை ரீதியான செய்தி வெளியிட்டால் மட்டும் போதுமா? அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? இதனை தற்போதைய அமைச்சர் முத்துச்சாமி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சரிசெய்ய வேண்டும் என்று மதுப்பிரியர்களே கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறார்கள்.

கண் துடைப்பு நாடகம் ஏன்?

டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ₹10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை என்று கூறுவது கண்துடைப்பு நாடகம்போல் உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்கும்போதே எடுக்க வேண்டியதுதானே. இப்போது வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்வது, “நாதஸ் திருந்திட்டான், அதையும் அவனே சொன்னான்” என்பது போல வேடிக்கையாக உள்ளது என்று நெட்டிசன்கள் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை நிறைய வருமானத்தினை ஈட்டித் தரக்கூடிய ஒரு துறையாக இருப்பது டாஸ்மாக் தான். அதில் வரக்கூடிய பணத்தினை வேறு துறைகளில் செலவு செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றுவதை விட்டு விட்டு ஒரு குடும்பம் மட்டுமே முன்னேறுவதற்கு ஒரு துறை காரணமாக இருத்தல் கூடாது என்று அரசியல் நோக்கர்கள் காட்டமாக கூறியுள்ளார்கள்.  குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டினால் எப்படி? பத்து ரூபாய் கூடுதல் விற்பனைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று மதுப்பிரியர்கள் சங்கடப்பட்டு வருகிறார்கள்.

 

Exit mobile version