செந்தில்பாலாஜிக்கு கமிஷன் தராத மதுக்கடைகள் மட்டும் மூடல்! ஊழல் தடுப்பு மையம் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நேற்று மூடப்பட்ட மதுக்கடைகள் பட்டியலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த கடைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிப்பாட்டுத்தளங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மூடப்படவில்லை என தேசிய குற்ற மற்றும் ஊழல் தடுப்பு மையம் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5 ஆயிரத்து 329 கடைகளை நிர்வகித்து வருகிறது. அரசு விதிகளின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பாட்டு தலம் அல்லது கல்வி நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திற்குள்ளும் மது கடைகள் அமைக்க கூடாது. மேலும், குடியிருப்புகளுக்கு அருகில் மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மதுபானக்  கடைகள் செயல்படுகின்றன. மேலும், கோயில்கள், தேவாலயங்கள் அருகிலும் மதுக்கடைகள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மதுக் கடைகள் குறைப்பு என்ற பெயரில், நேற்று 500 மதுக் கடைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த மதுக்கடைகள் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து உள்ளது. மாறாக வருமானம் குறைவாக உள்ள மது கடைகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முறையாக கமிஷன் தராத கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தேசிய குற்ற மற்றும் ஊழல் தடுப்பு மைய அமைப்பின் இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகில் உள்ள காட்டுப்பாக்கத்தில் சர்ச், பள்ளிகள் உள்ள இடத்தில் 8943 என்ற எண்ணில் செயல்படும் மது கடையை மூடுமாறு பலமுறை டாஸ்மார்க் மாவட்ட மேலாளரிடம் மக்கள் சார்பில் புகார் மனு அளித்ததாகவும், ஆனால் அந்த அந்த கடையின் மூலம் நல்ல வருவாய் வருவதால் அந்த கடை மூடாமல் இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள மது கடை மூடப்படாமல் உள்ளன.

மேலும் மதுக்கடைகளை மூடக்கோரி மக்கள் சாலைகளில் இறங்கி போராடிய இடங்களில் உள்ள பல மது கடைகள் மூடப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மது கடைகளின் எண்ணிக்கையை குறைக்கிறோம் என்ற பெயரில் விற்பனை குறைவாக உள்ள கடைகளையும், செந்தில் பாலாஜிக்கு தினமும் கமிஷன் முறையாக தராத கடைகளை மட்டும் கண்டறிந்து மூடியிருப்கதாகவும் தேசிய குற்ற மற்றும் ஊழல் தடுப்பு மைய்யம் குற்றம்சாட்டியுள்ளது.

Exit mobile version