டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விளக்கமளித்த தமிழக அரசு, கொரோனா அச்சத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முடிய நீண்ட நாள் ஆகும் என்பதால் தளர்த்தப்பட்ட ஊரடங்கில் மற்ற கடைகளைப் போல மதுக்கடைகளும் திறக்கப்படுவதாக கூறியுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை செய்யப்பட மாட்டாது என்றும் தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என்றும் குறிப்பிட்ட தமிழக அரசு, ஆன் லைனில் ,மது விற்பனை மேற்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்பட்டு பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
Discussion about this post