தஞ்சை – திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில், தஞ்சையை அடுத்த கல்லணையில் கட்டப்பட்டுவரும் பாலப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில், விவசாயத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை பகிர்ந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது கல்லணை. இப்பகுதியில், திருச்சி – தஞ்சையை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்ட அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்த 2016ல், 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி இந்தப் பகுதியில் துவங்கப்பட்டது.
தற்போது தமிழக அரசின் உத்தரவின்பேரில், இந்த பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் மூன்று மாதங்களில் பாலப்பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
Discussion about this post