இலங்கை இனப்படுகொலையில் தமிழர்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்ட நாள் இன்று. மன்னிக்க முடியாத அந்தப் படுகொலைக்கு திமுகவும் காங்கிரசும் எப்படிக் காரணமாக இருந்தன?, இன்று அவர்கள் மீண்டும் இணைந்து மறைக்கப்பார்க்கும் உண்மைகள் என்ன? – பார்ப்போம்…
தமிழக முதல்வராக கருணாநிதியும், இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங்கும் இருந்த 2008 ஆம் ஆண்டில்தான் இலங்கையில் தமிழர் மீதான அடக்குமுறைகள் வரலாறு காணாத உச்சத்திற்குப் போனது. அதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்தது. ஆனால் மத்தியில் அதிகாரத்தில் இருந்த ராஜுவ் காந்தி குடும்பத்தினரோ அதற்காக எல்லாம் கவலைப்படாமல் ராஜபக்சே அரசுக்குத் தொடர்ந்து உதவிகளை செய்து கொண்டே இருந்தார்கள்.
அப்போது சென்னை மாங்கொல்லையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ‘இலங்கை பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்கள்’ என்று சொன்னார். ஆனால் நாற்காலி சுகம் கண்ட திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட ஒருபோதும் ராஜினாமா செய்யவில்லை.
இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்ற கருணாநிதி 2009, ஏப்ரல் 27 ஆம் தேதியன்று ஒரு நாடகம் போட்டார். அரைநாளைக் கூட உண்ணாவிரதம் தாண்டாத நிலையில், ‘இலங்கையில் போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதனால் உண்ணாவிரதத்தை முடிக்கிறேன்’ என்று பொது வெளியில் பச்சையாகப் பொய் சொல்லி உண்ணாவிரதத்தை முடித்தும் கொண்டார்.
2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் நாளில், இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மானமுள்ள, இரக்கம் உள்ள, மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் மனமுடைந்து போன தருணம் அது.
இலங்கைத் தமிழர்களின் விரோதியான காங்கிரசும், அவர்களை நம்ப வைத்து முதுகில் குத்திய துரோகியான திமுகவும் இப்போது மீண்டும் கூட்டணி வைத்துள்ளனர். ‘இலங்கைப் படுகொலைக்குக் காரணம் இந்த இரண்டு கட்சிகள்தான்’ என்று 2016-ல் குற்றம் சாட்டிய வைகோவும் இப்போது அதே கூட்டணியில் இணைந்து இருக்கிறார். கொலைகாரன், கொலைக்கு துணை செய்தவன், சாட்சி – மூவரும் இணைந்த விநோதமான கூட்டணி இது.
தமிழகத்தில் வாழும் தமிழர்களை அன்போடு ‘தாயகத் தமிழர்கள்’ என்று அழைத்த நமது சொந்தங்களை, தொப்புள்கொடி உறவுகளான லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களைக் கொன்ற இந்தக் கூட்டணியை மானமுள்ள தமிழர்கள் மறக்கவும் மாட்டார்கள்… மன்னிக்கவும் மாட்டார்கள்…