தமிழகத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திகுறிப்பில், தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு-மேற்கு திசை காற்றும் சந்த்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றைக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24,25,26 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது, முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருக்கும் என்றும், மேலும் வெப்பநிலை 80 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்றும் கூடுதல் தகவலையும் அளித்துள்ளார்.