முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு..
தமிழ்நாடு தற்போது அமைதிப் பூங்கா இல்லை அமளிப் பூங்காவாக உள்ளது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியவர்களின் காலத்தில்தான் தமிழகம் அமைதிபூங்காவாக இருந்தது. பொதுமக்கள் அமைதியாக இருக்க விரும்புகிறார்கள். அது எங்கள் ஆட்சசியில் தான் இருந்தது. காந்தி சொல்வது போல “நகை அணிந்து நடு இரவில் செல்லும்போதுதான் உண்மையான சுதந்திரம்”. அதனை செயல்படுத்திய ஆட்சி அதிமுக ஆட்சிதான். ஆனால் இப்போது திமுக ஆட்ச்யில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஆளுங்கட்சி கடலூர் எம் எல் ஏ ஐப்பன் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏவிற்கே பாதுகாப்புக் கொடுக்க முடியாமல் இந்த விடியா அரசு தடுமாறுகிறது.
கொலைகொலையா முந்திரிக்கா போல கொலை கொலையா நடக்கிறது தமிழகத்தில். ஸ்டாலின் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல், நாங்கள் எதிர்த்து போராட்டங்களும் வலியுறுத்துல்களும் செய்த பிறகுதான் ஆலோசனைக் கூட்டம் போடுகிறார். இருந்தும் என்ன பயன். இன்றைக்கு ஒரு ரிமோட் முதலமைச்சர், பொம்மை முதலமைச்சரின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.
செவி சாய்க்காத அரசு…!
நாமிருப்பது ராம்தாஸ் நகர், இது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ரொம்ப காலமாக கட்டமைப்பு வசதி இந்த பகுதியில் இல்லை. தொகுதி டீ லிமிட்டேசனுக்குள் இந்த பகுதி வருகிறது. இது ராயபுரம் பகுதிக்கு உட்பட்டது. 1044 வீடுகள் 136 கோடி ரூபாயில் 4/6/2018 அன்றைக்கு அடிக்கல் நாட்டினோம். இரண்டு வருடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அன்றைக்கு அடிக்கல் நாட்டிய கல்வெட்டை எடுத்துவிட்டு, தற்போது ஸ்டாலின் திறந்ததாக அடிக்கலை மாற்றியுள்ளனர். 2021 லே கட்டடப் பணிகளை முடித்துவிட்டோம். தேர்தல் வந்ததால் நாங்கள் அதனை திறக்கவில்லை. ஆனால் தற்போது இதனை ஸ்டாலின் திறந்து ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார். ராயபுரத்தினை ஒட்டியுள்ள நான்கு பகுதி மக்களுக்காக கட்டப்பட்டது இந்த குடியிருப்புகள். ஆனால் இந்த அரசு எங்கெங்கோ இருந்து மக்களை இங்கு தங்க வைக்கிறீர்கள். 4 லட்சம் கொடுங்கள், 5 லட்சம் கொடுங்கள் என்று விடியா திமுக அரசு மக்களை வதைக்கிறது. அவர்கள் தற்போது போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு செவி சாய்த்து அரசு அவர்களை கண்டுகொள்ள வேண்டும்.
மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் அவர்கள், மன்னிப்புக்கடிதம் மூலம் மீண்டும் கட்சியில் சேர்வது என்பது அம்மா காலத்திலேயே உள்ளது. அதையே தற்போதைய பொதுச்செயலாளரும் செய்துள்ளார். ஆனால் இந்த மன்னிப்புக் கடிதம் மூவருக்கு பொருந்தாது. அவர்கள் பன்னீர், டிடிவி, சசிகலா ஆகிய மூவராவார்கள்.
கோடநாடு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, பன்னீர் திமுகவின் கைக்கூலி. அவர் ஒரு பொம்மல்லாட்ட பொம்மை. அவரை திமுக இயக்குகிறது. அவரால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ரெடி..!
மேலும் தமிழக மக்கள் தற்போது கொதித்து போய் உள்ளனர். முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலைவிட அவர்கள் சட்டமன்றத் தேர்தலைதான் விரும்புகின்றனர். அவ்வளவு அவலம். தக்காளி, வெங்காயம், இஞ்சி என்று அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையேறி போய்விட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியிருக்கிறது திமுக. ஆனால் அம்மா காலத்தில் இந்த விலைவாசி பிரச்சினை சரியாக அனுகப்பட்டு மக்களை நல்வழியில் கொண்டு சென்றது.
இதைவிட அவலாமாந்து டாஸ்மாக் பிரச்சினை. டாஸ்மாக்கை காலையில் திறக்க வேண்டும் போல் பேசுகிறார்கள் திமுகவினர். வேலைக்கு செல்பவர்கள் காலையிலே குடித்துவிட்டு சென்றால் விளங்குமா? எங்களிடம் இருக்கும் வரை முத்துச்சாமி நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அங்கு சென்றதும் எப்படி எப்படி மாறி இருக்கிறார் பாருங்கள். திடீரென்று டெட்ரா பேக் என்று சொல்கிறார். மதுப்பிரியர்கள் டெட்ரா பேக்கினை வீட்டிற்கு எடுத்துச் சென்றால், அதனை வீட்டில் பார்க்கும் குழந்தைகள், ஜூஸ் என்று நினைத்து குடித்துவிட்டால் அதற்கு முத்துச்சாமி பொறுப்பேற்பாரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவுக்கடி கேள்விக்கனைகளை செய்தியாளர்களிடம் முன்வைத்தார்.
வரும் 18 ஆம் தெதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறி தனது செய்தியாளர் சந்திப்பினை முடித்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் அவர்கள்.
Discussion about this post