சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக நிதி ஆயோக் அறிவித்துள்ளது.
நிதி ஆயோக் மற்றும் உலக வங்கி இணைந்து, சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்தாண்டுக்கான நிதி ஆயோக் பட்டியலில் சுகாதாரத்துறையில் தமிழகம் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இதயம் தொடர்பான நோய்களுக்கு, மேம்பட்ட உபகரணங்களைக் கொண்டு சிகிச்சை அளிப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிறந்த குழந்தைகள் இறப்பை தடுக்கும் விகிதத்தில் 2030ஆம் ஆண்டிற்கான இலக்கை தமிழகம் அடைந்துள்ளதாக நிதி ஆயோக் அறிவித்துள்ளது. பிறந்த குழந்தைகளை பதிவு செய்வதில் தமிழகம் மற்றும் அஸாம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. மாவட்ட அளவிலான தலைமை மருத்துவ அதிகாரிகள், மருத்துமனைகளை நிர்வகிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
Discussion about this post