வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும், குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறும் வாய்ப்பு நிச்சயம் உருவாகும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரா கோட்டையில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால், மாவட்ட ஆட்சி தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பசுமை புரட்சிக்காக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார். நவீன முறையில் குறைந்த நீரைப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறும் வாய்ப்பு நிச்சயமாக உருவாகும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
Discussion about this post