கஞ்சாவை கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்வை கொண்டாடிய விடியா அரசு, டன்கணக்கில் கஞ்சா போதை பொருட்களை எரித்துள்ளதன் மூலம், கஞ்சாவை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை விழா நடத்தி அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்துக்கு அடஷன் ஆவுற மாதிரி இந்த விடியா ஆட்சியும் விழா கொண்டாடுறதுல அடிக் ஷன் ஆயிடுச்சோ என்னவோ… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாங்குற ரேஞ்சுல வெத்து விளம்பரம் தேடிக்கிட்டு இருக்காங்க… வெள்ளிக்கிழம கூட “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடுன்”னு ஆரம்பிச்சி ஒரு வருஷம்னு ஒரு விழா கொண்டாடியிருக்காங்க… கடந்த ஒரு வருஷமா பிடிபட்ட கஞ்சாவெல்லாம் அழிக்கிறதுக்குத்தான் இந்த விழா… இதக் கூடா காணொளி காட்சியில முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க போலீஸ் அதிகாரிங்க எல்லாம் உறுதிமொழி எடுத்துருக்காங்க.
ஒரு திட்டத்த தொடங்கி வைக்கிறதுக்குத் தான் இப்படி காணொளியில வருவாங்கன்னு பார்த்தா, இந்த திராவிட மாடலு ஆட்சியில அழிக்கிறதுக்கும் இப்படி எல்லாம் செய்றது ரொம்ப ஓவர்தாங்க…
தஞ்சாவூர் மாவட்டம் அயோத்திப் பட்டியிலயும், திருச்சி, தஞ்சை , அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், 267 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 4 ஆயிரத்து192 கிலோ கஞ்சாவ, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் முன்னிலையில அழிச்சிருக்காங்க. கடந்த வருஷம் ஆயிரம் கிலோ அளவுலதான் கஞ்சாவ அழிச்சதாவும் இந்த வருசம் 4,192 கிலோ அழிச்சிருகிறதாவும் ஐ.ஜி. கார்த்திகேயன் பெருமையா சொல்லியிருக்காரு…
அதே மாதிரி நெல்லை மாவட்டம் திசையன்விளை பக்கத்துல உள்ள பரப்பாடி பொத்தையடியிலயும் கஞ்சாவ மொத்தமா எரிச்சிருக்காங்க. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம்னு 7 மாவட்டங்கள்ல, மொத்தம் 967 வழக்குகள்ல பிடிபட்ட 8 ஆயிரத்து 431 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள எரியூட்டி அழிச்சிருக்காங்க.
இந்த விடியா ஆட்சியில கஞ்சாவ அழிக்கிறதாச் சொல்லி ஆபரேஷன் டூ பாயிண்ட் ஓ, த்ரி பாயிண்ட் ஓன்னு வெர்ஷன கூட்டுறாங்களே தவிர, கஞ்சாவ முழுசா கட்டுப்படுத்த முடியலங்கிறது போன வருஷத்த விட இந்த வருஷம் அதிக அளவுல கஞ்சாவ எரிச்சதுல இருந்தே வெளங்கிடுச்சு… இதுக்கு ஒரு விழாவ வச்சி விடியா அரசு தன்னோட நிர்வாகத்திறன் லட்சணத்த தாங்களாவே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கு..