பந்த் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய அளவில் 2-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் காய்கறி லாரிகள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் மாவட்ட எல்லையான புளியரை பகுதி வரை மட்டுமே இயப்படுகிறது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்
Discussion about this post