இன்று (20.03.2023) வெளியாயிருக்கும் தமிழக பட்ஜெட்டில் வட சென்னை வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் 1000 கோடி ரூபாயினை திமுக அரசு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் கட்டமைப்பு பற்றாக்குறையும், வளர்ச்சி குறியீடுகளின் குறைபாடுகளும் களையப்படும் என்று சொல்லாப்படுகிறது. அதுவும் இந்த 1000 கோடியினைக் கொண்டு அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசானது இதனை செயல்படுத்தும் என்று பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
ஆனால் அதிமுக ஆட்சிகாலத்தில் அன்றைக்கு நிதியமைச்சராக செயல்பட்ட தற்போதைய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் 18,682 கோடி ரூபாயினை வட சென்னையின் வளர்ச்சிக்காகவும், சிறப்பு பணிகளுக்காகவும் நிதியானது ஒதுக்கப்பட்டது. அதற்காக 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இதில் வட சென்னைத் தொகுதிக்காக பல சிறப்புத் திட்டங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் அன்றைய தினம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் இன்றைக்கு வெறும் 1000 கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்துள்ளனர். இது அதிமுகவின் வளர்ச்சித் திட்டங்களை நகலெடுக்கும் தன்மையில் உள்ளது என்று சிலர் கூறிவருகின்றனர்.
Discussion about this post