இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. முன்னதாக வருகை புரிந்த அதிமுக கழக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அதிமுகவின் இதர சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர். பிறகு கூட்டத்தில் கலந்துகொண்டு வெளிநடப்பு செய்தவதாக அறிவித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையை விட்டு வெளிக்கிட்டனர்.
விடியா திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கானது சீர்க்கெட்டும் கொலை குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் ஆவின் பால் தட்டுப்பாடு, முதியவர்களுக்கு உதவித்தொகை குறைப்பு, இடைத்தேர்தலில் பட்டி பார்முலா மூலம் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு குறுக்குவழியில் வென்றது, மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்வழக்கு போட்டது போன்ற பல்வேறு காரணங்களுக்கு அதிமுக உறுப்பினர்கள் சட்டபேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Discussion about this post