TN Election Result LIVE : 5 சுற்றுக்குப் பின் மாறும் நிலவரங்கள்! முன்னிலை வகிக்கும் அதிமுக

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. சுமார் 4.5 கோடி வாக்காளர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 02ஆம் தேதி நடைபெறுகிறது. சுமார் 75 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும் நிலையில், ஒவ்வொரு சுற்றுக்கும் மாறப்போகும் முன்னிலை நிலவரங்களையும் அறிவிக்கப்படும் வெற்றி நிலவரங்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள். 

 நடப்பு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக(23), பாஜக(20), தமாகா(6), பெருந்தலைவர் மக்கள் கட்சி(1), தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்(1), புரட்சி பாரதம்(1), மூவேந்தர் முன்னேற்ற கழகம்(1), மூவேந்தர் முன்னணி கழகம்(1), பசும்பொன் தேசிய கழகம்(1) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக மட்டும் 179 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்(25), விசிக(6), சிபிஐ(6), சிபிஎம்(6), மதிமுக(6), ஐயூஎம்எல்(3), கொ.ம.தே.க(3), மமக(2), பார்வர்ட் பிளாக்(1), தமிழர் வாழ்வுரிமை கட்சி(1), மக்கள் விடுதலை கட்சி(1), ஆதி தமிழர் பேரவை(1) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

மதியம் 3 மணி: 

வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்ட  விராலிமலை தொகுதியில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

மதியம் 2 மணி: 

வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு.

 

காலை 11 மணி நிலவரம்: 

 

காலை 10.30 மணி நிலவரம் :

 

 காலை 10 மணி நிலவரம்: 

 

காலை 9 மணி நிலவரம் :

 

 

காலை 8.30 மணி நிலவரம் : 

 

தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

எடப்பாடி, போடிநாயக்கனூர், தொண்டாமுத்தூர், குமாரபாளையம், விழுப்புரம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை

 

காலை 8 மணி நிலவரம்: 

சென்னை கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு் இருப்பதால் புதிய அதிகாரியாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தமிழ்நாடு முழுக்க 5 லட்சத்து 64ஆயிரத்து 253 வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

காலை 7 மணி: 

காலை 6 மணி:

Exit mobile version