தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. சுமார் 4.5 கோடி வாக்காளர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 02ஆம் தேதி நடைபெறுகிறது. சுமார் 75 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும் நிலையில், ஒவ்வொரு சுற்றுக்கும் மாறப்போகும் முன்னிலை நிலவரங்களையும் அறிவிக்கப்படும் வெற்றி நிலவரங்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
நடப்பு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக(23), பாஜக(20), தமாகா(6), பெருந்தலைவர் மக்கள் கட்சி(1), தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்(1), புரட்சி பாரதம்(1), மூவேந்தர் முன்னேற்ற கழகம்(1), மூவேந்தர் முன்னணி கழகம்(1), பசும்பொன் தேசிய கழகம்(1) ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக மட்டும் 179 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் 191 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்(25), விசிக(6), சிபிஐ(6), சிபிஎம்(6), மதிமுக(6), ஐயூஎம்எல்(3), கொ.ம.தே.க(3), மமக(2), பார்வர்ட் பிளாக்(1), தமிழர் வாழ்வுரிமை கட்சி(1), மக்கள் விடுதலை கட்சி(1), ஆதி தமிழர் பேரவை(1) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. திமுக மட்டும் 173 தொகுதிகளில் போட்டியிட்டது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மதியம் 3 மணி:
வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்ட விராலிமலை தொகுதியில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
மதியம் 2 மணி:
வால்பாறை தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட திமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு.
காலை 11 மணி நிலவரம்:
- வால்பாறை தொகுதியில் 3வது சுற்றில் அதிமுக முன்னிலை
- எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 36,446 வாக்குகள் பெற்று தொடர்ந்து 6ஆவது சுற்றிலும் முன்னிலை வகிக்கிறார்.
- பெண்னாகரம் தொகுதியில் 4 வது சுற்று முடிவில் திமுகவைவிட (12720) பாமக வேட்பாளர் GK மணி (18633) 5913 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
- குறிஞ்சிப்பாடி தொகுதியில் 5 ஆவது சுற்றிலும் அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் முன்னிலை
- திமுக வேட்பாளர் ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பின்னடைவு
- விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.விசண்முகம் தொடர்ந்து முன்னிலை
-
கும்பகோணம். திருவிடைமருதூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 3ம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் யூனியன் வீரமணி 11709 வாக்குகளும், திமுக வேட்பாளர் கோவி. செழியன் 11208வாக்குகளும் பெற்றுள்ளனர்.
-
அதிமுக வேட்பாளர் யூனியன் வீரமணி 501 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
-
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 6 வது சுற்று முடிவில் அதிமுக 22765 திமுக 18149 வாக்குகள் பெற்று 4616 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் முன்னிலை
காலை 10.30 மணி நிலவரம் :
- கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ 2,607 வாக்குகள் பெற்று முன்னிலை
- விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பின்னடைவு
- துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவு
- அதிமுக வேட்பாளரை விட சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் பின்னடைவு
- துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபுவுக்கு பின்னடைவு
- விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு
காலை 10 மணி நிலவரம்:
- மயிலாடுதுறை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
- கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் தொடர்ந்து பின்னடைவு; அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு தொடர்ந்து முன்னிலை
- விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு
- விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை
- வேலூர் காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு
- கோவை மாவட்டத்தில் 10இல் 8 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை.
காலை 9 மணி நிலவரம் :
- அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவி முன்னிலை
- கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், சூலூர், மேட்டுப்பாளையம், கோவை வடக்கில் அதிமுக முன்னிலை
- காட்டுமன்னார் கோயில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் முன்னிலை
- சேலம் தெற்கு தொகுதியில் 3,467 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் முன்னிலை
- போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் 2,520 வாக்குகள் பெற்று முன்னிலை
- பொன்னேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிறுமணியம் பலராமன் முன்னிலை
- காட்டுமன்னார்கோயில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் முன்னிலை
- மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ முன்னிலை
- கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் முன்னிலை
- போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் 2,520 வாக்குகள் பெற்று முன்னிலை
காலை 8.30 மணி நிலவரம் :
- நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி முன்னிலை
- எடப்பாடி தொகுதியில் மின்னணு வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை
- திருச்சி கிழக்கு தொகுதியில் தபால் வாக்கில் வெல்லமண்டி நடராஜன் முன்னிலை
- திருப்பூர் வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் முன்னிலை
- கடலூர் தொகுதியில் தபால் வாக்கில் எம்.சி.சம்பத் முன்னிலை
- குமாரபாளையம் தொகுதியில் தபால் வாக்கில் தங்மணி முன்னிலை
- அதிமுக 4 இடங்களில் முன்னிலை
- கடலூர், மதுரை மேற்கு, திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தபால் வாக்கில் அதிமுக முன்னிலை
தபால் வாக்குகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.
எடப்பாடி, போடிநாயக்கனூர், தொண்டாமுத்தூர், குமாரபாளையம், விழுப்புரம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை
காலை 8 மணி நிலவரம்:
சென்னை கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு் இருப்பதால் புதிய அதிகாரியாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. தமிழ்நாடு முழுக்க 5 லட்சத்து 64ஆயிரத்து 253 வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காலை 7 மணி:
- வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், முகவர்கள் அனைவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர்
- அதேபோன்று கொரோனா பரிசோதனை சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது
- தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். காவல்துறையினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லயோலா கல்லூரியின் முழுவதுமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
- வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை
- லயோலா கல்லூரி முகப்பு பகுதியில் துணை ஆணையர் பகலவன் தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர்
காலை 6 மணி:
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்கள் தீவிர பரிசோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.