இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் கடந்த அக்டோபர் 15ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 23 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 23 பேரும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் அடைக்கப்பட்டனர்.
3 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 4வது முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 23 மீனவர்களை இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது . படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் இலங்கை கடற்படைக்கு அழுத்தம் கொடுத்து மீனவர்களுடைய உடமைகளை திரும்பப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post