தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு மருத்துவ சேவை எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதியளித்தார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குபட்ட அந்தோணியார்புரம், மறவன்மடம், தேவர் காலணி, முத்தம்மாள் காலனி, மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மக்கள் மருந்தகம் அமைக்கப்பட்டு மிக குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைப்பதாக குறிப்பிட்டார்.
முன்னதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ சேவை செய்து அரசியலுக்கு வந்தவர் என்றும், ஆனால் கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திகார் ஜெயிலுக்கு சென்று வந்தவர் என்றும் குறிப்பிட்டார்.