சென்னை-திருநெல்வேலிக்கு நடுவுல புதுசா, வந்தே பாரத் டிரைன் விட்டிருக்காங்க. இந்த டிரைன வரவேற்கும் விதமா தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதே டிரைன்ல டிராவல் பண்ணியிருக்காங்க. அடுத்த சில மணி நேரத்துல மதுரை வந்த டிரைன, மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல வச்சு விடியா திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார். அப்போ, டிரைன வரவேற்குறதுக்காக வந்தே பாரத் டிரைன் டிசைன்லயே கேக் எல்லாம் ரெடி பண்ணி எடுத்துட்டு வந்த பழனிவேல் தியாகராஜன், எதிர்கட்சி ஆளு, முட்டி மோதிட்டு இருக்குற கவர்னருனு கூட யோசிக்காம, தமிழிசைய கேக் வெட்ட சொல்லி கை தட்டியிருக்காரு. பதிலுக்கு தமிழிசை மேடம், கேக்க வெட்டி பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டி விட்டிருக்காங்க. இதைப் பாத்த உபிங்க எல்லாம் கொதிச்சு போயிருக்காங்க. அட என்னப்பா இது… கவர்னருங்க கூட நம்ம டம்மி சண்டை செஞ்சிட்டு இருக்கோம், இவர் என்னடானா கேக் வாங்கித் திண்ணு உறவு கொண்டாடிட்டு வந்திருக்காருனு இணையதளத்துல கொந்தளிச்சுட்டு இருக்காங்க. ஸ்டாலின் குடும்பம் 30 ஆயிரம் கோடிய பதுக்குன விஷயத்தை உளறுனதுல இருந்து கட்சியில ஓரங்கட்டப்பட்டிட்டு இருக்காரு பழனிவேல், எந்த மீட்டிங்கலயும் முறையா மரியாதை குடுக்குறதில்லை, மதுரைக்குள்ள கட்சிக்காரய்ங்களே மதிக்க மாட்டேங்குறாங்க. அதனால இதுக்கும் மேல எதுக்கு இங்க இருந்து குப்ப கொட்டிட்டு, பேசாம தாமரைக்கு கீழ தஞ்சம் அடைஞ்சிரலாம்னு முடிவு பண்ணி தமிழிசை மூலமா பாஜக தலைமைக்கு சிக்னல் கொடுக்குறாரு போல பழனிவேல் தியாகராஜன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…