மத்திய அரசு இந்தியை கற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தாது என்று, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகர நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருமங்கலத்தில் மொழிப் பிரச்சனையினால் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே ரயில்கள் வந்தததை சுட்டிக் காட்டினார். இது போன்ற பிரச்சனையை தவிர்க்கவே இருவருக்கும் புரியும் மொழியில் பேச அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் இந்தி ஒருபோதும் திணிக்கப்படாது எனக் குறிப்பிட்ட அவர், புதிதாக மொழியை கற்றுக் கொள்வது நன்மை பயக்கும் என்றும் கூறினார்.