தமிழகத்தில் ஆன்லைனில் விளையாட்டு விவகாரத்தில், ஏராளமானோர் தற்கொலை செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார். மேலும், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை விதிக்கும் விவகாரத்தில் விடியா திமுக அரசு, ஆளுநருக்கு எதிராகவும், அவதூறு செய்யும் விதமாகவும் பல்வேறு செயல்களை செய்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜு சந்திரசேகர், ஆன்லைன் விளையாட்டு
விவகாரத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தடை விதிப்பது
குறித்தும் பல்வேறு மாநிலங்களுடன் ஆலோசனை நடந்து வருகிறது என்றார். மாநிலங்களின் கருத்துகளின் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டு விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவை மத்திய அரசு மேற்கொள்ளும் என மத்திய அமைச்சர் ராஜு சந்திரசேகர் தெரிவித்தார்.
Discussion about this post