தொழிலாளர்களின் போராட்டம் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் விளக்கம்!!

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 20ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர், சென்னை பல்லவன் இல்லம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுக்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அகவிலைப்படி, ஊதிய உயர்வு உள்ளிட்டவைகளை ஆலோசித்து முடிவு எடுக்க நிர்வாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக குழு மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை வரும் 20ம் தேதி குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version