கோபிச்செட்டிப்பாளையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இன்று முகாமின் கடைசி நாள் என்பதால், 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கடந்த 22 ஆம் தேதி வருவாய்த்துறையினர் சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினரால் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. இந்த முகாமில், முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், வீட்டு மனைப் பட்டா, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் மீதான மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது ஒரு வாரக் காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post