தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் டெல்லியில் நடைபெற்ற நிதியமைச்சர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக கூறினார்.
தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 4 ஆயிரத்து 458 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்து இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.