அறக்கட்டளை தொடங்குபவர்கள் 3 மாதத்திற்குள் பொது அறக்கட்டளை சட்டத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளைகளின் கீழ் செயல்படும் பல்வேறு கல்லூரிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் முறையாக இல்லை எனவும், குற்ற வழக்கு பின்னணி உடையவர்களும் அறக்கட்டளைகளின் பொறுப்புகளில் இருப்பதாகவும், தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளதாகக் கூறி வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதனை விசாரித்த உச்சநீதி மன்றம், அறக்கட்டளை பதிவுச் சட்டத்தை அமல்படுத்தாதது ஏன்? என்று மாநில தலைமைச் செயலாளருக்கு கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தற்போது பொது அறக்கட்டளை பதிவுச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும், அறக்கட்டளை வைத்திருப்போர் 3 மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்தார். அதையடுத்து, தமிழ்நாடு பொது அறக்கட்டளை மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.