தமிழ்நாட்டில் மேலும் பல தளர்வுகளுடன் நவம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில் பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தவும், சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தலாம் எனவும்கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதிமுதல் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள், சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகள், 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படவும், கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களுடன், தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயும் இயக்கப்படும் சாதாரண பேருந்து மற்றும் குளிர்சாதன பேருந்துகளில், 100 சதவீத பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
தேவையான எண்ணிக்கையில், கலைஞர்கள் மற்றும் பணியாளர்களுடன் அனைத்து வகையான படப்பிடிப்புகளையும் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவுகளுடன் கேட்டு தெரிந்துகொள்ள
↕↕↕ ↕↕↕