கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர் ராஜேந்திரன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கடந்த 8 ஆண்டுகளில் 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதுமாவிலங்கை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதோடு, 108 ஆம்புலன்ஸ் சேவையையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார்.
பொதுச் சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்களே இல்லாத சூழல் நாளை முதல் உருவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், 524 காலிப்பணியிடங்கள் நாளை நிரப்பப்படுவதால், காலிப்பணியிடங்களே இல்லாத துறையாக சுகாதாரத்துறை திகழும் என பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post