அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நியூயார்க்கில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதலமைச்சருடன் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்குவதாகவும், ஏற்கனவே இயங்கி வரும் தொழில்களை விரிவுப்படுத்தவும் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. தகவல் தொழில்நுட்பம், மின் உற்பத்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட துறைகளில், பல ஆயிரம் கோடி ரூபாயில் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள நிறுவனங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். தொழில் தொடங்க ஏதுவாக தமிழ்நாட்டில் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.