உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சர்வதேச உடல் உறுப்பு தான வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாகவும், உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தொடந்து ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏழை எளிய மக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அதிகபட்சமாக 25 லட்ச ரூபாய் வரை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வழங்கப்படுவதாகவும், உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post