கொங்கன் வாய்க்காலில் தற்காலிகத் தடுப்பணை அமைத்த தமிழக அரசு

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகேயுள்ள கொங்கன் வாய்க்காலில் தற்காலிகத் தடுப்பணைக் கட்டி 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காப்பாற்றிய தமிழக அரசிற்கு அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

காவிரியில் இருந்து பிரியும் இந்த கொங்கன் வாய்க்காலின் முகப்பில் உள்ள தடுப்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு அதிகளவு வெளியேறி வந்தது. மேலும் இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கும் அபாயமும் இருந்தது. எனவே இந்த வாய்க்காலில் தடுப்பணை கட்டித் தர வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தற்காலிகமாக தடுப்பணையைக் கட்டிக் கொடுத்துள்ளது. இதனால் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதுகாக்கப்பட்டதாக மகிழ்ச்சி தெரிவித்த விவசாயிகள், தமிழக அரசிற்கு நன்றியினையும் தெரிவித்தனர்.

Exit mobile version