கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் 67% மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 67 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. குறிப்பாக தென்னை, வாழை விவசாயிகளின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. இதனிடையே கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தென்னை மரங்களுக்கான நிவாரணம் ஆயிரத்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், படகுகளுக்கான நிவாரணமும் உயர்த்தப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் தமிழக அரசு, நகர் பகுதிகளில் 92 சதவீதமும், கிராமப்புறங்களில் 67 சதவீதமும் மின்விநியோகம் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version