ஒமிக்ரான் தொற்று..! அலட்சியம் காட்டுகிறதா தமிழ்நாடு அரசு..?

தமிழ்நாடு அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல், அலட்சியம் காட்டியது தான் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்புக்கு காரணமா..? என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், தொற்றின் வீரியத்தை முன்கூட்டியே கணிக்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது வரை சென்னை, மதுரை, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒமிக்ரான் தொற்று கண்டறிப்பட்டுள்ளது.

சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் இருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு 34ஆக அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவில் நவம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு, பல நாடுகளுக்கு பரவிய நிலையில், கடந்த 15ஆம் தேதி சென்னையில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது.

வடமாநிலங்களை தொடர்ந்து கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்த நிலையில், விமான நிலையங்கள், மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தாமல் திமுக அரசு மெத்தனம் காட்டியதால் தற்போது ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொற்றின் வீரியத்தை முன்கூட்டியே கணிக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குறைகூறியுள்ளனர்.ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமோ..? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இனியும் அலட்சியம் காட்டாமல் கொரோனாவை விட வேகமாக பரவும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Exit mobile version