சென்னையில் குடிநீர் தட்டுபாட்டை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தங்கு தடையின்றி குடிநீர் வழங்க தமிழக அரசு கையாண்டு வரும் புதிய நுட்பங்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
குடிநீர் தட்டுபாட்டை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு பருவ மழை பொய்த்த நிலையில், மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி பல்வேறு நீர் நிலைகளில் இருந்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமும், விவசாய கிணறுகள் மூலமும் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குழாய் தண்ணீர் செல்லாத இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுவதை போல தேவைப்படும் இடத்தில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன. குறுகிய சந்துகளிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதால், பெண்கள் நீண்ட வரிசையில் நிற்பதும், நீண்ட தூரம் செல்வதும் தவிர்க்கப்பட்டுள்ளது.
தினந்தோரும் அதிகாலை 5.30 மணி முதல் 8.30 மணிக்குள்ளும் அதேபோல், மாலை 6 மணி முதல் 10 மணி வரை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நேர விரையத்தை தவிர்க்க இஞ்சக் ஷன் முறையில் அடிப்பம்புகளில் தானாக குடிநீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுள்ளதாகவும், பழுதாகியுள்ள அனைத்து குழாய்களையும் போர்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை டேங்குகளை சுத்தப்படுத்த வேண்டும் என்றும், குடிநீரை காய்ச்சி குடிக்கவேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் தூரித செயல்பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தங்கு தடையின்றி குடிநீர் வழங்கி வரும் அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post