திமுகவினரின் 2ஜி அலைக்கற்றை ஊழலால், தமிழகத்திற்கு உலக அளவில் அவமானம் ஏற்பட்டதாக கோவையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய தமிழக முதல்வர், தமிழகத்திற்கு உலக அளவில் அவமானம் திமுகவால் ஏற்பட்டது என்று குற்றம்சாட்டினார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர், எஸ்.பி. வேலுமணி, 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி மத்திய அரசு மற்றும் அதிமுக தலைமையிலான ஆட்சியில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
Discussion about this post