ஆரோக்கிய பாரத பயணத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஆரோக்கிய உணவை வலியுறுத்தி ஸ்வச் பாரத் சார்பில் யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரை முடிவில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் 6 பிரிவுகளில் தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் சிவகாசி ஆகிய நகரங்கள் சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சொபே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விருதுகளை வழங்கினார்.
Discussion about this post