தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூடுகிறது.
தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு கூடும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழக பட்ஜெட் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post