தமிழ் பட காமெடி சீனா வரையும் போயிருச்சா..விவேக் ட்விட்டர் பதிவு

 சினிமாவில் காதல் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு காமெடி திரைப்படங்களுக்கும் இருக்கிறது.நகைச்சுவை என்பது சொல்லும் வார்த்தைகளில் இருந்தாலும், அதனை நடித்துக்காட்டும் கதாபாத்திரத்திற்கு தான் அதிக பொறுப்பு உள்ளது.அந்த வகையில் செந்தில், கவுண்டமணி, வடிவேல், விவேக் ஆகியவர்கள் காமெடி மன்னன்கள் என்றே கூறலாம்.

மேலும் தமிழ் திரைப்படத்திற்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு இருக்கிறது.இந்நிலையில் விவேக்கின் காமெடி ஒன்றிற்கு சீன இளைஞர்கள் டிக்டாக் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இதனை பார்த்த நடிகர் விவேக் ‘அடங்கொக்கா மக்கா! தமிழ்பட காமெடி சைனா வரை போயிருச்சா ‘ என பதிவிட்டு அந்த வீடியோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version