கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையான ஒன்றாக மாறிபோயுள்ளது.
சிலசமயங்களில் மீனவர்களின் வலைகளை அறுத்தும் மீன்களை கடலில் கொட்டியும் அட்டூழியத்தில் ஈடுபடுவதும் வழக்கம். இந்தநிலையில், 12 நாட்களுக்கு பிறகு நேற்றையதினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.
இதனால் மீன்கள் ஏதும் பிடிக்காமல் மீனவர்கள் அச்சத்துடன் ராமேஸ்வரம் திரும்பினர். இதனிடையே இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.