வங்கி அதிகாரிகள் போல் பேசி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி

தொலைபேசி மூலம் வங்கி அதிகாரிகள் போல் பேசி வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்த கும்பலை கைது செய்த சென்னை குற்றப்பிரிவு போலிசார் 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் , சென்னை சூளைமேடு, தேனாம்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்கள் தொடங்கி , தொலைபேசி மூலம் பேசி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் மோசடி செய்த, வெங்கடேஷ், விக்னேஷ், சதீஷ், பூபதி, கிருஷ்ணகுமார், திராவிட அரசன், சார்லஸ் உள்ளிட்ட ஏழுபேர் கைது செய்யப்படுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் வங்கி விவரங்களை தொலைபேசி மூலம் யாருக்கும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர்,மேலும் கடன் மற்றும் வேலை வாங்கி தருவதாக் கூறி வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்

Exit mobile version