12ம் தேதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தகில் ரமணி பொறுப்பேற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, கொலிஜியம் பரிந்துரையின்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தகில் ரமணி நியமிக்கப்பட்டார். இவர் வரும் 12ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார்.  ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள்,உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Exit mobile version