கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் தெரசா பிரைட். இவர் கடந்த ஒருவாரமாக காய்ச்சல் மற்றும் தொற்று பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரசா பிரைடுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தெரசா பிரைட் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் கூறுகையில், பன்றிக்காய்ச்சலை ஆரம்பத்திலேயே குணப்படுத்த முடியும், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றார்.
பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பன்றிக்காய்ச்சலுக்கான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுமாறும் மருத்துவமனை டீன் பாலசுப்பிரமணியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
Discussion about this post