45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து காணப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தேசிய மாதிரி நிறுவனம் நடத்திய ஆய்வில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவீதம் அதிகரித்து காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நகர்ப் புறங்களில் வேலையின்மை அளவு 7.8 சதவீதமாகவும், கிராமப் புறங்களில் வேலையின்மை அளவு 5.3 சதவீதமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேலையின்மை குறித்து சர்வே வெளியாகியிருப்பதால், இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.