வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீர் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோரங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் நீர் புகுந்துள்ளது.
இதனால் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மின்சாரம், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் இருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
ஊருக்குள் புகுந்த வெள்ளம் 600 ஏக்கர் விளைநிலத்திலும் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்களை தூர்வாராததுதான் வெள்ளம் குடியிருப்புக்குள் புகுந்ததற்கான காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இயல்பு நிலையை ஏற்படுத்தி தருமாறு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post