சுரேஷ் ரெய்னாவிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கைது பேட்ஸ்மேனாக விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. பகுதிநேர பந்துவீச்சாளராகவும் அணியில் பந்துவீசி வந்திருந்தார். 2011-ல் இந்திய அணி கோப்பையை வென்ற போது இவரது பங்களிப்பும் உதவியாக இருந்தது.

ஐ.பி.எல். போட்டியில் கடந்த பத்து வருடங்களாக விளையாடி வருகிறார். ‘தல டோனி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக விளையாடி வருகிறார். இதனால், ‘சின்ன தல’ என்று ரசிகர்கள் செல்லமாக இவரை அழைக்கிறார்கள். மேலும், இந்திய அணியில் கைப், யுவராஜ் சிங்கிற்கு பிறகு பீல்டிங்கில் அசத்தி வருபவர் சுரேஷ் ரெய்னா.

டோனி ஓய்வுக்கு பிறகு கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றுக்கொண்டார். இதன் பிறகே, சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக, இங்கிலாந்துக்கு எதிராக 2018ல் விளையாடி இருந்தார். கடந்த சில மாதங்களாகவே முழு உடற்தகுதி இல்லாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், சுரேஷ் ரெய்னா இடதுகாலின் முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட புகைப்படத்தை, பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் மூன்று அல்லது ஆறு வாரங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னா அறுவை சிகிச்சை கொண்ட நிலையில், விரைவில் அவர் குணமடைந்து முழு உடற்தகுதியை பெற வேண்டும் என்று ஜாண்டி ரோட்ஸ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் வாழ்த்தி உள்ளனர்.

Exit mobile version