பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரண வழக்கை சிபிஐ விசாரிப்பது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
மும்பையில் உள்ள வீட்டில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, தற்கொலை செய்து கொண்டார். நடிகை ரியாவும், அவரது குடும்பத்தினரும் சுஷாந்திடம் மோசடி செய்ததாக அவரது தந்தை கே.கே.சிங், பாட்னா காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரியா மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், தன் மீது பாட்னாவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, மும்பைக்கு மாற்றக் கோரி ரியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே, சுஷாந்த் மரண வழக்கை பீகார் மாநில அரசு சிபிஐயிடம் ஒப்படைத்துள்ள நிலையில், சிபிஐ விசாரணையை தொடர்வது குறித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. வழக்கை பீகார் அரசு சிபிஐயிடம் ஒப்படைத்ததற்கு, மகாராஷ்டிரா காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post